குடியாத்தம், ஆக. 27: குடியாத்தம் நகர காவல் நிலையத்தில், காவலர் பற்றாக்குறை உள்ளது. இதனால், கூடுதல் பணிச் சுமையில் போலீஸôர் திணறி வருகின்றனர்.
இக்காவல் நிலையம் 1910-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், 1981-ம் ஆண்டு தாழையாத்தம் பஜாரில் சொந்த கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
இங்கு ஒரு ஆய்வாளர் தலைமையில் 50 போலீஸôர் பணியாற்றி வந்தனர். தற்போது, ஒரு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 22 தலைமைக் காவலர்கள், 6 முதல் நிலைக் காவலர்கள், ஒரு இரண்டாம் நிலைக் காவலர் என 38 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
84 கிராமங்கள் சேர்ப்பு!
குடியாத்தம் நகரம் மட்டுமே இக்காவல் நிலைய எல்லையாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இக்காவல் நிலைய எல்லை விஸ்தரிக்கப்பட்டு, நகரையொட்டிய 84 கிராமங்கள் சேர்க்கப்பட்டன.
விசாரணை பாதிப்பு!
ஏற்கெனவே, காவலர் பற்றாக்குறையால் திணறி வந்த காவல் நிலையப் பணிகள், தற்போது மேலும் கூடுதல் சுமையாகியுள்ளன. இதுமட்டுமின்றி, இருக்கும்
காவலர்களைக் கொண்டே இரவு ரோந்துப் பணி, குற்றப் பிரிவு, நீதிமன்றப் பணிகள், கைதி வழிப் பாதுகாப்பு, நிலைய எழுத்தர்கள், நிலைய பாரா, வயர்லெஸ் பாதுகாப்புப் பணி, போக்குவரத்துக் காவல் உள்ளிட்ட வழக்கமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், உள்ளூர் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகள் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளனன. இந்நிலையில், போலீஸôர் விடுப்பு எடுத்தால், மற்றவர்கள் கூடுதல் பணிச் சுமைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதனால், புகார்களின் மீதான விசாரணை, குற்றவாளிகளைத் தேடும் பணி, முந்தைய வழக்குகள் மீதான விசாரணை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு வருகின்றன.
இரு மாநிலங்களின் எல்லைப் பகுதி...
காவலர் பற்றாக்குறை உள்ளதால், போலீஸ் நண்பர்கள் குழு மூலம் இரவு ரோந்துப் பணி, உள்ளூர் நிகழ்ச்சிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குடியாத்தம் நகரம் ஆந்திரம், கர்நாடக மாநிலங்களின் எல்லையையொட்டி அமைந்திருப்பதால், அங்கிருந்து வரும் சரக்கு வாகனங்கள், நபர்களையும் கண்காணிக்க வேண்டியுள்ளது.
இதனால், காவல் பற்றாக்குறையைப் போக்க வேண்டும், போக்குவரத்துக் காவல் நிலையப் பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

