டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மாதிரி சுகாதாரப் பூங்கா சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர், ஆக 20: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரத்தை வலியுறுத்தி அமைக்கப்பட்ட மாதிரி சுகாதாரப் பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.   பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:11 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர், ஆக 20: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரத்தை வலியுறுத்தி அமைக்கப்பட்ட மாதிரி சுகாதாரப் பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த 2003-04 ஆம் ஆண்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ், வீட்டுக்கு ஒரு கழிப்பறை அமைக்க வலியுறுத்தப்பட்டது.

  இதற்காக | 500 மதிப்பிலான பீங்கான் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி நிர்வாகத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை மூலம் அளிக்கப்பட்டன. இதனால், பல்வேறு கிராமப் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கழிப்பறை அமைத்தனர்.

  இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் | 1 லட்சத்து 54 ஆயிரத்தில், 24 மாதிரிக் கழிப்பறை சுகாதாரப் பூங்கா அமைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக | 34 ஆயிரத்தில் கம்பி வேலியும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

  ஆனால், தொடங்கப்பட்ட ஒரு சில தினங்கள் மட்டுமே இந்த மாதிரி சுகாதாரப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றனர். பின்னர், போதுமான பராமரிப்பில்லாததால் அந்த வளாகத்தைச் சுற்றி செடிகொடிகள் வளர்ந்து, தற்போது புதராகக் காட்சியளிக்கிறது.

  மேலும், புதிய பேருந்து நிலைய வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், சுகாதார வளாகம் அருகே தேங்கி நிற்பதால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனிடையே, இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் சமூக விரோதச் செயல்களும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

  மாவட்ட மக்களிடையே, சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் கட்டப்பட்ட இந்த வளாகம், தற்போது சுகாதாரமின்றிக் காணப்படுகிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என   பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.