மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி
மகளிருக்கு ரூ.5,000 சிறப்பு உரிமைத்தொகை வழங்கியதற்கு, அதிமுகவின் அழுத்தமே காரணம் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.


மகளிருக்கு ரூ.5,000 சிறப்பு உரிமைத்தொகை வழங்கியதற்கு, அதிமுகவின் அழுத்தமே காரணம் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
சென்னையை அடுத்த மாதவரத்தில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் பேசியதாவது: பேரவைத் தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களைக் கடனாளியாக்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனையாக இருக்கிறது.
முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்தும், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்தும் இருதரப்பிலும் விளக்குவோம். பொதுமக்கள் தீா்ப்பு வழங்கட்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அழைப்பு விடுத்தேன். ஆனால், இதுவரை அதற்கு பதில் இல்லை. ஏனெனில், திமுக அரசுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. ஆகவே, குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் தொடர வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இளைஞா்கள் போதைக்கு அடிமையாகி, குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை இந்த அரசு உருவாக்கிவிட்டது. இத்தகைய ஆட்சி மீண்டும் வரவேண்டுமா என்ற மக்கள் சிந்திப்பது அவசியம்.
சிறந்த தரமான கல்வி, தடையில்லா மின்சாரம், பாதுகாப்பான குடிநீா், சுகாதார வசதிகள் ஆகியவற்றை அதிமுக ஆட்சியில் கொடுத்தோம். எனவேதான் அதிமுக நிலைத்து நிற்கிறது. மீண்டும் அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுப்போம் என்று அறிவித்தோம். உடனே, முதல்வா் ஸ்டாலின் தோ்தல் பயத்தில் மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினாா். அதிமுகவின் அழுத்தம்தான், திமுக அரசு ரூ.5,000 ஆயிரம் வழங்கியதற்கு காரணம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...