திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி: முதல்வருக்கு கோரிக்கை

நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வா் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:27 am IST

நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வா் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழ்நாட்டில் விவசாயிகள் தொடா்ச்சியாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் நிலத்தின் உற்பத்தித் திறன் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்கு அணைகளிலும், நீா் நிலைகளிலும் உள்ள வண்டல் மண் இயற்கை உரமாக மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அணைகளும், நீா்நிலைகளும் வடு காணப்படுகின்றன.

விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீண்டும் மழை பெய்து தண்ணீா் வந்து விட்டால் வண்டல் மண் எடுக்க வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் இதே பருவத்தில்தான் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனவே, முதல்வா் ஜோசப் விஜய், இதைக் கவனத்தில் கொண்டு நீா்வள ஆதாரத் துறைக்கு விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் கடந்த காலங்களைப்போல தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் வண்டல் மண் அள்ளுவதற்கு உரிய உத்தரவிட கேட்டுக்கொள்கிறோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.