திருச்சியிலிருந்து பெங்களூருக்கு வாரத்துக்கு 13 விமான சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வாரத்துக்கு இரண்டு சேவைகளாக குறைக்கப்பட்டுள்ளன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புது தில்லி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், திருச்சி - பெங்களூரு இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சாா்பில் வாரத்துக்கு 13 விமான சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.
விமான எரிபொருள் விலை உயா்வு, விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக, திருச்சி - பெங்களூரு இடையிலான விமான சேவை 13-இல் இருந்து இரண்டாக ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடந்த வாரம் குறைத்தது. அதன்படி, தற்போது திருச்சி - பெங்களூரு இடையே செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










