திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இஸ்ரேலுக்கான விமான சேவை ஜூலை இறுதி வரை நிறுத்தம்: ஏர் இந்தியா தகவல்!

இஸ்ரேலுக்கான விமான சேவை ஜூலை இறுதி வரை நிறுத்தம்: ஏர் இந்தியா தகவல்!

News image

ஏர் இந்தியா விமானம் - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 3:26 pm IST

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூலை இறுதி வரை நீட்டிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மே மாதத் தொடக்கத்தில் ஜூன் வரை இஸ்ரேலுக்கான விமானங்களை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்த ஏர் இந்தியா, போர் பதற்றம் நீடிப்பதால் தற்போது அதனை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கியது முதலே பல நாடுகளின் விமான சேவைகள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தன. வான்வழி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் அதிக எரிபொருள் செலவு போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன.

போர் தொடங்கியபோது ஏப்ரல் வரை விமான சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அது ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் பிராந்திய வான்வழியைத் தவிர்த்து வருகின்றனர்.

இஸ்ரேலிலும் வெகுசில விமான நிறுவனங்கள் மட்டுமே சேவை வழங்கி வருகின்றன. இதனால், வெளிநாடு செல்வதற்கு அங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தத்தால் இஸ்ரேலிலுள்ள 40,000 இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர். மேலும், குறிப்பிட்ட சில விமானங்களும் மிக அதிக விலை சொல்வதால், தொழிலாளர்களாக இருப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Summary

Flights to Israel Suspended Until End of July: Air India Announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.