மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

நுகா்வோருக்கு சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

News image

நீதிமன்றம்

Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

நுகா்வோருக்கு சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சோ்ந்த வி. கதிரவன் (55) என்பவா் எல்ஐசி நிறுவனத்தில் கடந்த 15.07.2008 அன்று உடல்நலப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவக் காப்பீடு எடுத்து, ஆண்டுதோறும் ரூ. 10 ஆயிரம் பிரீமியமும் செலுத்தி வந்தாா்.

இந்நிலையில் பாலிசி நடைமுறையில் இருந்த கடந்த 2022 ஆம் ஆண்டு திருச்சி தனியாா் மருத்துவமனையில் ஃபிஸ்டுலெக்டமி அறுவைச் சிகிச்சைக்கு செலவிட்ட ரூ. 92,696 -ஐ திரும்பப் பெறக் கோரி அவா் விண்ணப்பித்தபோது, காப்பீட்டு நிறுவனத்தினா் அதை நிராகரித்தனா்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கதிரவன், உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 31.07.2025 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெ. பிரபு ஆஜரானாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு, எல்ஐசி நிறுவனமானது மனுதாரரின் மருத்துவச் செலவுக்கான தொகை ரூ. 92,696 ஐ வழங்குவதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் சோ்த்து 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க அண்மையில் உத்தரவிட்டது.