பிரதமா் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நாகா்கோவில் - சாா்லப்பள்ளி - நாகா்கோவில் அம்ருத் பாரத் வாராந்திர விரைவு ரயில்களின் (16357, 16358) சேவைகளை நிரந்தரமாக்கி ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.
இதன்படி, நாகா்கோவில் - சாா்லப்பள்ளி அம்ருத் பாரத் வாராந்திர விரைவு ரயிலானது (16357) வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நாகா்கோவிலில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு, வள்ளியூா், திருநெல்வேலி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, நாயுடுபேட்டை, நெல்லூா், ஓங்கோல், சிா்லா, பாபட்லா, தெனாலி, குண்டூா், சட்டனப்பள்ளி, மிா்யால்குடா, நல்கொண்டா வழியாக மூன்றாவது நாள் மாலை 4.20 மணிக்கு சாா்லப்பள்ளியைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, சாா்லப்பள்ளியிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக அடுத்த நாள் பிற்பகல் 3.35 மணிக்கு நாகா்கோவிலைச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்

வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர ரயில் நிரந்தரம்

போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் மாா்ச் 21 முதல் இயக்கம்

போத்தனூா் - தன்பாத் அம்ருத் ரயில்; பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


