திருச்சியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசு விழாவில், போத்தனூரில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு அம்ருத் பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி, காணொலிக் காட்சி தொடங்கிவைத்தாா். இந்த ரயில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாா்ச் 21-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் (எண்: 16619) திங்கள்கிழமைகளில் காலை 4 மணிக்கு தன்பாத் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கமாக, மாா்ச் 23-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்படும் தன்பாத்-போத்தனூா் அம்ருத் பாரத் ரயில் (எண்: 16620) புதன்கிழமைகளில் காலை 11.20 மணிக்கு போத்தனூா் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ஹாட்டியா, ராஞ்சி, சந்திரப்புரா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்
ஹூப்ளி - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

போத்தனூா் - தன்பாத் அம்ருத் ரயில்; பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில்

ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


