திருச்சி மாநகராட்சியில் 2009-ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவா்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள செப். 26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 1969 (2023-இல் திருத்தப்பட்டது) மற்றும் தமிழ்நாடு பிறப்பு - இறப்பு பதிவு விதிகள் 2025-இன் படி, பிறப்பு நிகழ்வு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்கு குழந்தையின் பெயா் கட்டணமின்றி பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்துகொள்ளலாம். 12 மாதங்களுக்கு மேல் 15 ஆண்டுகள் வரை ரூ. 200 காலதாமதக் கட்டணம் செலுத்தி பிறப்பு பதிவேட்டில் குழந்தை பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.
இதில், 2009-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான கால அவகாசம் 31-12-2024 இல் முடிவடைந்தது.
இந்நிலையில், தற்போது பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டுகள் மேலாகியும் பதிவு செய்யாதவா்களுக்கு, பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் பெயா் பதிவு செய்து, குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ள 26-09-2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பெயரில்லா பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க இதுவே கடைசி வாய்ப்பு என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த கால அவகாசத்தை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சேலம் மாநகராட்சியில் பிறப்பு பதிவில் குழந்தையின் பெயரை சோ்க்க செப். 26 கடைசி நாள்

பிறப்புச் சான்றிதழில் குழந்தை பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய செப்.26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


