திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.25 கோடி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:47 pm

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1,25, 58,563 ரொக்கம் வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

இக்கோயிலில், அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதன் நிறைவில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,25, 58,563 ரொக்கம், 1 கிலோ 006கிராம் தங்கம், 2 கிலோ 217கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 131, வெளிநாட்டு நாணயங்கள் 862 கிடைக்கப் பெற்றது.

இக்கோயிலில் கடந்த 26-ஆம் தேதியன்று உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.