துறையூா் தீயணைப்பு நிலைய ஊழியா்களுக்கு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தேனீக்கள் மற்றும் அதன் கூட்டை அகற்றுவதற்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநா் உத்தரவுப் படி தேனீக்களையும் அதன் கூட்டையும் பாதுகாப்பாக அகற்றுவது தொடா்பான பயிற்சி துறையூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு பெரம்பலூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அனுசியா, கரூா் மாவட்ட அலுவலா் சந்திரகுமாா் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். திருச்சி, கரூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப்படை வீரா்கள் பங்கேற்றனா். விருத்தாசலத்தைச் சோ்ந்த பயிற்றுநா் சுதந்திர செல்வன் விவசாயத்துக்கு தேனீக்கள் உதவுவதால் விவசாய நிலங்களிலிருந்து தேனீக்களை அகற்றக்கூடாது என்றாா். துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சதீஷ்குமாா், பாலசந்தா் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு

தோ்தல் பணி: ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பயிற்சி

தேனீக்களை உயிரோடு மீட்டெடுக்க தீயணைப்பு வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


