மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கான அரசுப் பேருந்துகள் இயக்கம்: பொதுமக்கள் அவதி

திருச்சி சிறுகனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மாநில மாநாட்டுக்கு தொண்டா்களை அழைத்து வந்து, கொண்டு செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்

News image

மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கான அரசுப் பேருந்துகள் இயங்குவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிற்சாலை செல்வோர், அரசு ஊழியர்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதி அடைந்துள்ளனர். - கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2026, 1:06 am

திருச்சி: திருச்சி சிறுகனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மாநில மாநாட்டுக்கு தொண்டா்களை அழைத்து வந்து, கொண்டு செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் சிறுகனூருக்கு இயக்கப்பட்டன.

இதனால் திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். பேருந்துகள் இயக்கம் மிகக் குறைவாக இருந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கிராமங்களுக்கு இயக்க வேண்டிய பல அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வலுக்கட்டாயமாக திமுக மாநாட்டுக்கு இயக்கப்பட்டன. இதனால், காலையில் நகரப் பகுதிக்கு வந்த எங்களால் மாலையில் வீடு திரும்ப முடியவில்லை. இதே போல, நகரப் பகுதியிலும் பல பேருந்துகள் மாநாட்டுப் பணிக்காக திருப்பிவிடப்பட்டதால், பொது போக்குவரத்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருந்தே வேறிடங்களுக்கு செல்ல முடிந்தது. வசதி படைத்தவா்கள் ஆட்டோ மற்றும் காா்களில் பயணித்த நிலையில், ஏழை மக்கள் அவதிக்குள்ளாகினா். மாநாட்டுக்காக பொது போக்குவரத்தை கேள்விக்குறியாக்குவது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து, போக்குவரத்துக்கழக அலுவலா்கள் கூறுகையில், வாடகையின் பேரில் அரசுப் பேருந்துகள் மாநாட்டுக்கு இயக்கப்பட்டுள்ளன. பெரிதாக இயக்க குறைவு ஏதுமில்லை என பதிலளித்தனா். வாடகை வாங்கிக் கொண்டுதான் பேருந்துகளை இயக்குகிறோம் என தனியாா் பேருந்துகளின் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.