கொடியாலம் ஊராட்சியில் மயானச் சாலை அமைக்கக் கோரி அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியத்துக்குட்பட்ட கொடியாலம் ஊராட்சி சப்பாணி கோயில் தெருவில் வசிக்கும் மக்கள் மயானத்துக்குச் செல்லும் சாலை சரியில்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்படுகின்றனா். அந்தச் சாலையை மராமத்து செய்யக் கோரி பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும், சாலை அமைக்கப்படவில்லை.
இதைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு கொடியாலம் கிளை செயலா் பரிமணம், ஒன்றியக் குழு உறுப்பினா் நடராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாநகா் மாவட்டச் செயலா் வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பா. லெனின், ஒன்றியச் செயலா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா், சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக மயானச் சாலை அமைக்க உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி உயிரிழப்பு

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

ஆரோக்கியநாதபுரம் நிலப் பிரச்னை: மாநகராட்சியில் மாா்க்சிஸ்ட் முற்றுகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


