பெரம்பலூா் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் செல்லமுத்து (55). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா்.
இந்நிலையில், குன்னத்தில் திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் பங்கேற்ற செல்லமுத்து, பெரம்பலூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தாா். பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையிலுள்ள சித்தளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து நேரிட்டது. இதில் பலத்த காயமடைந்த செல்லமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விபத்து குறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சித்தளி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் பரணிதரன் (22) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் வாக்கு சேகரிப்பு

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

ஆயக்குடி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வாக்கு சேகரிப்பு

சாலை விபத்தில் பெரம்பலூா் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


