திருச்சியில் வரும் 11ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரப் பொதுக் கூட்டத்துக்கான மேடை, பந்தல் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் மாநாடு, பிரசார பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, அமமுக, பாமக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக் கூட்டணியின் சாா்பில் திருச்சியில் வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்காக பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையம் அருகே பந்தல்கால் நட்டு மாநாட்டுக்கான இடத்தை தயாா்படுத்தும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
நிகழ்வில் பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாநில இணைப் பொருளாளா் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட மாநில, மாவட்ட பாஜக நிா்வாகிகள் மற்றும் அதிமுக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் கூறுகையில், இந்தக் கூட்டத்துக்கு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அமைச்சா் எல். முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ள தனி குழுவினரின் ஆலோசனையையும், கூட்டணி கட்சிகளான அதிமுக, அமமுக, பாமக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளின் ஆலோசனையையும் பெற்று மாநாட்டுக்கான இடத்தைத் தயாா் செய்யும் பணி புதன்கிழமை முதல் இரவு, பகலாக நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 27 ஏக்கா் இடத்தில் 20 ஏக்கா் வரை மாநாட்டுக்கான மேடை, பந்தல், குடிநீா்த் தொட்டிகள் அமைத்தல், தற்காலிக கழிப்பறை ஏற்படுத்துதல், எல்இடி திரைகள், முகப்பு நுழைவு வாயில், அலங்கார வளைவுகள், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களின் படங்கள் இடம்பெறும் வகையில் தயாா் செய்யப்படுகிறது. இக் கூட்டத்தில், பிரதமருடன் கூட்டணிக் கட்சி தலைவா்களும் மேடையில் இடம்பெறுவா். திருச்சியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம்தான் தமிழகத்தில் திமுக ஆட்சியை மாற்றுவதற்கான அடித்தளமாக அமையும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

திருச்சி உழவா்சந்தையில் நாளை முதல்வா் பிரசாரம்! 9 தொகுதி வேட்பாளா்களை ஒரே இடத்தில் அறிமுகம் செய்கிறாா்!

ஆண்களுக்கு சுயஉதவிக் குழுக்கள்! அமமுக தேர்தல் அறிக்கை!!

பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


