லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

News image

தே.ஜ. கூட்டணி - ADMK

Updated On :24 மார்ச் 2026, 6:45 am

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக மற்றும் அமமுக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.

பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாமக மற்றும் அமமுக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

பாமக

பாப்பிரெட்டிபட்டி, கும்மிடிப்பூண்டி, பென்னாகரம், குன்னம், தருமபுரி, விழுப்புரம், அந்தியூர், ஆற்காடு, ஓமலூர், திருவள்ளூர், சங்ககிரி, பாலக்கோடு, விக்கிரவாண்டி, திருத்தணி, செய்யாறு, செஞ்சி, ஜெயங்கொண்டம், திண்டிவனம் (அ) அரூர், மயிலம், வானூர் (அ) காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, விருத்தாசலம், மேட்டூர், சோளிங்கர், புவனகிரி

அமமுக

சைதாப்பேட்டை, திருப்பத்தூர், பூவிருந்தவல்லி, நான்குநேரி, ஓட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை வடக்கு, திருவையாறு, காரைக்குடி, திருச்சி மேற்கு, மன்னார்குடி

Summary

What are the constituencies that PMK and AMMK will contest in the NDA alliance?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.