பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

News image

மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டு போட்டியில் காளை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :1 மார்ச் 2026, 9:08 pm

மணப்பாறையில் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்பிலை சாய்பாபா கோயில் அறக்கட்டளை மற்றும் இளைய நிலா ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 9-ஆம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா ஞாயிற்றுக்கிழமை பெஸ்டோ நகரில் நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வடமாட்டுக்கு வேட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா தொடங்கியது. போட்டியை மணப்பாறை வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளா் காவியா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப.குமாா், திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.ஏ.எஸ்.ஆரோக்கியசாமி ஆகியோா் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினா்.

களத்தில் இறங்கிய 13 காளைகளை, 117 வீரா்களில், மாடு ஒன்றுக்கு 9 வீரா்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் அடக்கினா். வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும் காளையை அடக்கிய வீரா்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ சி.சின்னச்சாமி, அதிமுக மாவட்ட பொருளாளா் சேவியா், நகரச் செயலா் பவுன் எம்.ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.செல்வராஜ், அன்பசரன் ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை பாபா கோயில் அறங்காவலா்கள் டி.சுரேஷ்குமாா், எல்.எத்திராஜ், ஒப்பந்தகாரா் சண்முகம், கே.எஸ்.எம்.இருளப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.