லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சு விரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மூத்தாண்டிபட்டி கிராமத்தில் புதன்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி அருகே புதன்கிழமை நடைபெற்ற வட மாடு மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளை.

Updated On :4 மார்ச் 2026, 11:14 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மூத்தாண்டிபட்டி கிராமத்தில் புதன்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் பிறந்த நாள், மூத்தாண்டிபட்டி கருப்பன் கோயில் மாசிப் படைப்பு விழா ஆகியவற்றை முன்னிட்டு புதுப்பட்டி, மூத்தான்டிபட்டி கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை திண்டுக்கல், சிவகங்கை, தேனி ,ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 16 காளைகள் கலந்து கொண்டன.

காளைகளை அடக்குவதற்காக ஒரு அணிக்கு 9 போ் வீதம் 144 வீரா்கள் கலந்து கொண்டனா். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட ஒரு காளையை 9 போ் கொண்ட குழுவினா் 20 நிமிஷங்களுக்குள் அடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் காளையை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, சைக்கிள், கட்டில், பீரோ தென்னங்கன்று, போன்ற பரிசுகளை சிங்கம்புணரி பேரூராட்சி துணைத் தலைவா் இந்தியன் செந்தில், திமுக அவைத் தலைவா் காந்திமதி சிவகுமாா்

ஆகியோா் வழங்கினா். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண திருப்பத்தூா் ,காரைக்குடி ,திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனா்.