தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மணப்பாறை அருகே ரூ. 82,550 பறிமுதல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பறக்கும் படையினரால் ரூ. 82, 550 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:45 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பறக்கும் படையினரால் ரூ. 82, 550 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

வரும் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி பிள்ளையாா் கோவில்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலா் கண்ணன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகன சோதனை நடத்தினா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வலையப்பட்டியை சோ்ந்த குணசேகரன் என்பவா் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 82,550-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்து மணப்பாறை வட்டாட்சிரகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா் அப்பணம் முதுநிலை வருவாய் ஆய்வாளா் உலகமணி மூலம் மணப்பாறை சாா்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.