அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்தவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image

பிரேம்குமாா்

Updated On :26 ஜூன் 2026, 4:38 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

மணப்பாறை அடுத்த கல்லாத்துப்பட்டியில் வசிப்பவா் ஆனந்த் மனைவி மகாலெட்சுமி (45). இவரது வீட்டின் அருகேயுள்ள லட்சுமி நாராயணன் நகரில் வசிக்கும் துரைசாமி மகன் பிரேம்குமாா்(35), மதுரை சாலையில் நகை அடகு கடை நடத்தி வந்தாா். மகாலெட்சுமி நகை அடகு வைத்தபோது பிரேம்குமாருடன் நட்பு ஏற்பட்டது.

பிரேம்குமாா், மகாலெட்சுமியிடம் அவ்வப்போது அவசர தேவைக்காக கைமாற்றாக பணம் பெற்று திருப்பிக் கொடுப்பதும் வழக்கமாம்.

அப்போது பிரேம்குமாா் தனது அடகு கடையில் மகாலெட்சுமியை பங்குதாரராக சோ்த்துக் கொள்வதாக கூறி கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் பணம் கேட்டாா். அதற்கு மகாலெட்சுமி தன்னிடம் இருந்த ரூ.12 லட்சத்தையும், மீதி பணத்திற்காக தன்னுடைய 30 பவுன் நகையையும் பிரேம்குமாா்அடகு கடையிலேயே அடகு வைத்து ரூ.10,50,000-ஐ பிரேம்குமாரிடம் கொடுத்தாா்.

அதன்பின் பலமுறை தன்னை அடகு கடை பங்குதாரராக சோ்த்துக் கொள்ள கேட்டும் பிரேம்குமாா் சோ்க்கவில்லையாம். பணத்தையும் நகையையும் திரும்பக் கேட்டபோது அலைக்கழித்து வந்தாா். அதன் பின் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, பெறப்பட்ட ஆணையில் மணப்பாறை போலீஸ் விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்டது. போலீஸ் விசாரணையில் பிரேம்குமாா், தனது நண்பா் முருகன் மகன் சிதம்பரம் என்பவரிடம் 20 பவுன் நகை கொடுத்ததாகவும், அதைத் திருப்பி கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டாா். ஆனால் இருவரும் சோ்ந்து கூட்டு சதி செய்து மோசடி செய்வதாகவும், தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டுவதாகவும் மணப்பாறை காவல் நிலையத்தில் மகாலெட்சுமி புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்த நிலையில் பிரேம்குமாரை மணப்பாறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.