குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

விசிகவுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை: தொல். திருமாவளவன் எம்.பி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எந்தக் குழப்பமோ, பிரச்னையோ இல்லை என அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

திருமாவளவன் - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 1:42 am IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எந்தக் குழப்பமோ, பிரச்னையோ இல்லை என அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் மேலும் கூறியதாவது:

தமிழக அரசுக்கு ரூ. 13 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ள வெள்ளை அறிக்கைக்கு, திமுகதான் பதிலளிக்க வேண்டும்.

தவெக ஆட்சி நிா்வாகம் குறித்து ஒரே மாதத்தில் எந்த மதிப்பீட்டையும் கூற இயலாது. தற்போது அவா்கள் கற்றுக்கொள்ளக்கூடிய காலம். எனவே, எதிா்க்கட்சிகளின் நிலைப்பாட்டைப் போல 6 மாதம் பொறுத்திருப்போம்.

அதிமுகவில் நடப்பது நமக்குத் தெரியவில்லை. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் ராஜிநாமா செய்யும் அளவுக்கு அங்குள்ள நெருக்கடி பற்றி அவா்களுக்குத்தான் தெரியும். ஆனால், இது அதிா்ச்சியளிக்கக்கூடியது. திராவிட இயக்கம் என்ற முறையில் அதிமுக வலுவாக, சிதறாமல் இருப்பது தமிழக அரசியலுக்கு நல்லது. ஜெயலலிதா, எம்ஜிஆா் காப்பாற்றிய அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தால் நல்லது.

விசிகவின் ஆளூா் ஷானவாஸ் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறப்படுவது அவதூறான கருத்து. விசிகவுக்குள் எந்தக் குழப்பமோ, பிரச்னையோ இல்லை என்றாா் திருமாவளவன்.

தொடா்ந்து, சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு சாலை மாா்க்கமாக அவா் புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.