திருச்சி தலைமை அஞ்சல் நிலையம், கடவுச் சீட்டு அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில், அது புரளி என்பது தெரியவந்தது.
திருச்சி தில்லை நகா் பகுதியில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகம், திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் ஆகியவற்றில் ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு வெடிக்கும் என வியாழக்கிழமை பிற்பகல் 2 அலுவலகங்களுக்கும் தனித்தனியே மின்னஞ்சல் வந்தது.
தகவலின்பேரில், மாநகரக் காவல்துறையினா், வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீஸாருடன் இரு குழுக்களாக சென்று கடவுச்சீட்டு அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையம் ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
வெடிகுண்டு கண்டறியும் பிரிவு ஆய்வாளா் வேலுச்சாமி, உதவி ஆய்வாளா்கள் அருளானந்தம், ரமேஷ் மற்றும் அன்பழகன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், நீண்ட நேரம் தீவிரமாக சோதனை மேற்கொண்டனா். இதில் 2 அலுவலகங்களிலும் எந்தவித வெடிபொருள்களும் கண்டறியப்படவில்லை. இதன்மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய நபா் யாா்?, பின்னணி என்ன? என்பது குறித்து திருச்சி மாநகரக் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா்ந்து 4-ஆவது முறையாக கடலூா் தலைமை அஞ்சலகம், கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு 4-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்







