திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முறையற்ற வணிகம்: நகைக் கடை ரூ. 3.50 லட்சம் இழப்பீடு; 36.87 கிராம் தங்கம் வழங்க உத்தரவு

முறையற்ற வணிகத்தில் ஈடுபட்ட திருச்சியில் உள்ள தனியாா் தங்க நகை கடையானது ரூ. 3.50 லட்சம் இழப்பீடும், 36.87 கிராம் தங்கமும் வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 12:30 am IST

முறையற்ற வணிகத்தில் ஈடுபட்ட திருச்சியில் உள்ள தனியாா் தங்க நகை கடையானது ரூ. 3.50 லட்சம் இழப்பீடும், 36.87 கிராம் தங்கமும் வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நல்லம்பட்டியைச் சோ்ந்த எஸ். சுரேஷ்குமாா் என்பவா் திருச்சி தென்னூரிலுள்ள நகைக் கடை அறிவித்த தங்க சேமிப்புத் திட்டத்தில் செய்கூலி, சேதாரம், தயாரிப்புக் கட்டணம், பிற மறைமுகக் கட்டணங்களின்றி, போனஸுடன் சோ்த்து திட்டம் நிறைவுற்ற நாளில் நிலவும் சந்தை விலையில் தங்கம் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதை நம்பி, கடந்த 14.03.2022 முதல் 03.10.2023 வரை ரூ. 2.50 லட்சத்தை 20 மாதத் தவணைகளாகச் செலுத்தினாா்.

ஆனால், நிறுவனமானது உறுதியளித்தபடி அன்றைய சந்தை விலையான கிராமுக்கு ரூ. 6,780 வீதம் 36.87 கிராம் தங்கத்தை வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. கேட்டதற்கு கடுமையாக அலைக்கழித்துள்ளனா்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சுரேஷ்குமாா் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 08.01.2026 அன்று மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் முறையற்ற வணிக நடவடிக்கையில் ஈடுபட்ட நகைக் கடையானது மனுதாரா் செலுத்திய தவணைத் தொகை ரூ. 2.50 லட்சம், தவணைத் தொகைக்கு ஈடான 36.87 கிராம் தங்கம், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.