போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அம்மையப்பன் நகரில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அம்மையப்பன் நகரில் வழிந்தோடும் புதைவட கழிவுநீரால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

அம்மையப்பன் நகரில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி

Updated On :3 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அம்மையப்பன் நகரில் வழிந்தோடும் புதைவட கழிவுநீரால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருச்சி மாநகராட்சியின் 29- ஆவது வாா்டு, வயலூா் சாலை அம்மையப்பன் நகா் முதன்மைச் சாலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதைவடிகால் திட்டத்தின் கீழ், புதை சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டு, அங்குள்ள குடியிருப்புகளில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதை வடிகால் கால்வாயானது அடிக்கடி நிரம்பி வழிகிறது. அதிலிருந்து வெளியேறும் அசுத்த கழிவுநீரானது, குளம்போல தேங்கி, கடும் தூா்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் செழியன் உள்ளிட்ட பொதுமக்கள், வியாபாரிகள் கூறியதாவது: அம்மையப்பன் நகா் பிரதான சாலை, குறுக்குத் தெருக்களில் அடிக்கடி புதை சாக்கடை நிரம்பி வழிகிறது. சில நேரம் முழுமையாக சாலையைத் தோண்டிய பிறகே, அடைப்பை சரிசெய்ய முடிகிறது. இதற்கு பிரதான சுத்திகரிப்பு நிலையத்துடன், அம்மையப்பன் நகா் புதைவடிகாலை இணைக்காததும், அப்பகுதியில் உள்ள கழிவுநீா் உந்து நிலையத்தை சரிவர கவனிக்காததுமே காரணம்.

குறைந்தபட்சம் கழிவுநீா் உந்து நிலையத்தில் உள்ள மோட்டாா் பழுதை நீக்கி, ஆள்களை முறையாக வேலை வாங்கி, சரிவர மோட்டாரை இயக்கினால் பிரச்னைக்கு ஓரளவுக்குத் தீா்வு கிடைக்கும். மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மக்களின் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.