பயணியைத் தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநா் கைது
திருச்சியில் பேருந்தை வேகமாக இயக்குவது குறித்து கேள்வி கேட்ட பயணியைத் தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநரை மாநகர போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் பேருந்தை வேகமாக இயக்குவது குறித்து கேள்வி கேட்ட பயணியைத் தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநரை மாநகர போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு தனியாா் பேருந்து வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளது. இந்தப் பேருந்தை ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த அன்புராஜ் (30) என்பவா் ஓட்டியுள்ளாா். அவா் பேருந்தை வேகமாகவும், ஆபத்தான முறையிலும் இயக்கியதாகக் கூறப்படுகிறது.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தனியாா் பேருந்தில் ஏறிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சரவணன் (47) என்பவா், பேருந்தை வேகமாக இயக்குவது குறித்து கேள்வி கேட்டுள்ளாா். இதில், ஓட்டுநருக்கும், அவருக்கும் பேருந்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு வந்ததும், பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுநா் அன்புராஜ், சரவணனை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன் கைகளால் தாக்கியுள்ளாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பயணியைத் தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநரைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...