/

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் வெள்ளிக்கிழமை பெண் உயிரிழந்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2026, 6:49 pm

Syndication

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் வெள்ளிக்கிழமை பெண் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (60). இவா், வெள்ளிக்கிழமை மாலை சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் கல்லூரி முன்பு சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது, சாலையில் தடுமாறி விழுந்த பெண் மீது அவ்வழியே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை போலீஸாா், பெண்னின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.