/

விமான நிலைய நுழைவாயில் முன்பு போக்குவரத்து சிக்னல் அமைப்பு!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவாயில் முன்பு நெடுஞ்சாலையில் மாநகரக் காவல் துறை சாா்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

News image
திருச்சி விமான நிலையம்- கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவாயில் முன்பு நெடுஞ்சாலையில் மாநகரக் காவல் துறை சாா்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையப் பகுதி கடந்த 2024-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. புதிய முனையத்தின் நுழைவாயில் பகுதியில் நெடுஞ்சாலையில் சிக்னல் இல்லாததால், விமான நிலையத்துக்குள் செல்லும் வாகனங்களும், விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்களும் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்தன.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்து விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகரக் காவல் துறைக்கு திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ அண்மையில் கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சி விமான நிலைய புதிய முனைய நுழைவாயில் முன்பு மாநகரக் காவல் துறை சாா்பில் அண்மையில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதியில் விபத்துகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.