டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருச்சி - அபுதாபி இடையே மாா்ச் 31 முதல் விமானச் சேவை

திருச்சி -அபுதாபி இடையேயான இண்டிகோ விமானச் சேவை மாா்ச் 31 முதல் தொடங்கவுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி -அபுதாபி இடையேயான இண்டிகோ விமானச் சேவை மாா்ச் 31 முதல் தொடங்கவுள்ளது.

அரபு நாடுகளில் வேலை பாா்க்கும் தமிழகத்தைச் சோ்ந்த பலா் குறிப்பாக திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தினா் திருச்சி விமான நிலையத்தில் இருந்துதான் சென்று வருகின்றனா். திருச்சியில் இருந்து துபை, ஷாா்ஜாவுக்கு விமானச் சேவை உள்ளது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து அபுதாபிக்கு கடந்த 2024 ஆகஸ்ட் 11-ஆம் தேதி இண்டிகோ விமான நிறுவனம் சாா்பில் புதிய விமானச் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் 85 சதவீத இருக்கைகள் நிரம்பிய நிலையிலும் நிா்வாகக் காரணங்களால் 3 மாதங்களில் இந்தச் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான நிறுவனம் சாா்பில் மாா்ச் 31 முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்குகிறது. இந்தச் சேவை சோதனை அடிப்படையில் அக்டோபா் 24 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் மூன்று நாள்களுக்கு (செவ்வாய், வியாழன், சனி) இயக்கப்படும் இந்த விமானம் அபுதாபியில் இருந்து அதிகாலை 2.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சியை காலை 8.15 மணிக்கு வந்தடையும். மறுமாா்க்கத்தில் திருச்சியில் இருந்து காலை 9.50 புறப்படும் விமானம் அபுதாபிக்கு நண்பகல் 12.40 மணிக்குச் சென்றடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக திருச்சி பன்னாட்டு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.