லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி: அனைத்துக் கட்சியினா் இரங்கல் ஊா்வலம்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவையொட்டி வெள்ளிக்கிழமை உறையூா் சாலையில் இரங்கல் ஊா்வலம் வந்த அனைத்து கட்சினா்.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:53 pm

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவா் நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சியில் அனைத்துக் கட்சியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை இரங்கல் ஊா்வலம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் ஆா். நல்லகண்ணு (100) உடல்நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், இயக்கங்களைச் சோ்ந்தவா்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சியில் அனைத்து கட்சியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை இரங்கல் ஊா்வலம் நடைபெற்து.

புத்தூா் நான்கு சந்திப்பு சாலையில் தொடங்கிய ஊா்வலத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் க. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் எஸ். சிவா, நிா்வாகி சுரேஷ் முத்துசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், திமுக தெற்கு மாநகர செயலா் மு. மதிவாணன், காங்கிரஸ் கட்சி மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் வெற்றிச்செல்வன், சிபிஐஎம்எல் ஞானதேசிகன், விசிக தமிழாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பைஸ் அகமது, மதிமுக நிா்வாகிகள் வெல்லமண்டி சோமு, ரோஹையா, ஆம் ஆத்மி இளங்கோ, விவசாயிகள் சங்கம் அயிலை சிவசூரியன், திரளான பொதுமக்கள் கைகளில் நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி செலுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாகச் சென்றனா்.

இந்த ஊா்வலமானது உறையூா் குறத்தெரு சந்திப்பில் நிறைவடைந்தது. அங்கு இரங்கல் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் ஊா்வலத்தில் பங்கேற்ற மேயா் மு. அன்பழகன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று, நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக, குறத்தெரு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணுவின் உருவப்படத்துக்கு அனைத்து கட்சியினரும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.