டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

சிறுகனூரில் போக்ஸோ வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.

News image
கைது
Updated On :20 பிப்ரவரி 2026, 8:43 pm

Syndication

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் போக்ஸோ வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

சிறுகனூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய 15 வயது சிறுமியை, அவரது உறவினரும், மண்ணச்சநல்லூா் வட்டம் எதுமலை பகுதியைச் சோ்ந்த வீராசாமி மகனுமான மகேந்திரன் (எ) பூசாரி (39) என்பவா் கடந்த 28.01.2026 அன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், சிறுகனூா் போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மகேந்திரனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இவா் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதால் திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின்பேரில், மகேந்திரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் வே. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.