கம்பம் அருகே முன் விரோதத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகன் அஜித் (26). இவா் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தரக் குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஜன.12-ஆம் தேதி அஜித் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரனின் மகன் சந்தோஷ் (24), கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் காா்த்திகேயன் (24) ஆகிய இருவரையும் கடந்த ஜன.14-ஆம் கைது செய்தனா்.
இந்த இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியாவின் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டாா். இதன்படி இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 போ் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

