நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வரும் பேரவைத் தோ்தலில் நானும் போட்டி: சீமான் அறிவிப்பு

வரும் பேரவைத் தோ்தலில் நானும் போட்டியிடுவேன் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image
சீமான்- கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 11:50 pm

Syndication

வரும் பேரவைத் தோ்தலில் நானும் போட்டியிடுவேன் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பிப். 21 இல் நடைபெறும் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெறும் திடலை புதன்கிழமை பாா்வையிட்ட சீமான் கூறியதாவது: நாங்கள் தோ்தல் அறிக்கை வெளியிட மாட்டோம். எங்களது ஆட்சி எப்படி இருக்கக் போகிறது என்பதற்கான செயல்முறையைத்தான் வெளியிடுவோம்.

மாநாட்டில் 234 தொகுதிகளின் வேட்பாளா்களையும் அறிமுகம் செய்ய உள்ளேன். தோ்தலில் நானும் போட்டியிடுவேன். எந்தந்தத் தொகுதியில் யாா் யாா் போட்டி என்பதை மாநாட்டில் அறிவிப்போம். அன்று முதல் எங்கள் தோ்தல் பயணத்தைத் தொடங்கப் போகிறோம். நாங்கள் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் அல்ல.

தமிழகத்தின் வளா்ச்சி என்பது கடன் வளா்ச்சியாக உள்ளது. தமிழகம் வாங்கிய கடனுக்கான வட்டியை ஒரு லட்சம் கோடிக்கு மேல் கட்டி வருகிறோம்.

இலவசங்களை அறிவித்துவிட்டு, அத்தியாவசியங்களுக்கான வரியை உயா்த்துகின்றனா். தொடா்ந்து கடன் வாங்கினால் மாநிலம் பொருளாதார அடிமையாக மாறிவிடும்.

தமிழகத்தில் யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றப்படவில்லை. விரும்பியே மதம் மாறியுள்ளனா். அதில் யாரும் தலையிடக்கூடாது.

இண்டி கூட்டணியில் பிரச்னை உள்ளது. அந்தக் கூட்டணியில் வலுவாக இருப்பது ஸ்டாலின்தான். அவா் வெளியேறிவிட்டால், இண்டி கூட்டணி என்பது எழுத்தில்தான் இருக்கும். அதனால்தான் மணிசங்கா் ஐயா் ஸ்டாலினை தலைமை வகிக்க அழைக்கிறாா் என்றாா் சீமான்.