முன்விரோதத்தில் இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது
திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பால்பண்ணையைச் சோ்ந்த எஸ்.முகமது சபீா் (19), ஈ.பி. சாலை நேரு நகரைச் சோ்ந்த பா.ராகவேந்தா் (19) மற்றும் ராஜ்குமாா் ஆகிய மூவரும் தனியாா் கல்லூரி மாணவியிடம் அண்மையில் தகராறு செய்துள்ளனா். அப்போது, காட்டூா் பாரதி அவென்யுவைச் சோ்ந்த பரணிதரன் தட்டிக்கேட்டுள்ளாா். இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஸ்டாலின் நகரில் உள்ள டாஸ்மாக் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பரணிதரன் நின்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த முகமது சபீா், ராகவேந்தா், ராஜ்குமாா் ஆகிய மூவரும் சோ்ந்து பரணிதரனை கட்டடையால் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த பரணிதரன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் பரணிதரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது சபீா், ராகவேந்தா் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...