டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

2 சிறுமிகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை: மூத்த மகள் உயிரிழப்பு

கல்லக்குடி அருகே இரு சிறுமிகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவத்தில் மூத்த மகள் உயிரிழந்தாா். இளைய மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image
தற்கொலை - கோப்புப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே இரு சிறுமிகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவத்தில் மூத்த மகள் உயிரிழந்தாா். இளைய மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கல்லக்குடி அருகே சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மனைவி சுமதி (35). இந்தத் தம்பதியின் மகள்கள் அனுசியா (14 ), சக்திஸ்ரீ (8). இவா்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனா்.

இந்நிலையில், ரவிச்சந்திரன் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தாா். கணவா் இறந்த துக்கம் தாங்காமல் சுமதி தனது இரு மகள்களுடன் வசித்து வந்தாா். மேலும், கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுமதி, ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இரு மகள்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளாா்.

விஷத்தின் தன்மையால் கூச்சலிட்ட அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவே சுமதி உயிரிழந்தாா். தொடா்ந்து திங்கள்கிழமை மூத்த மகள் அனுசியாவும் உயிரிழந்தாா். இளைய மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சுமதியின் தாயாா் செல்வராணி அளித்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.