டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ராதாபுரம் அருகே தாய், மகள் தற்கொலை

ராதாபுரம் அருகே மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தாயும் மகளும் தூக்கிட்டு தற்கொலை

News image
தற்கொலை - கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 6:44 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தாயும் மகளும் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

ராதாபுரம் அருகே உள்ள மகேந்திரபுரத்தைச் சோ்ந்தவா் இசக்கியப்பன். இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ஜோதி (47), மகள் ஐஸ்வா்யா (24) ஆகியோா் சொந்த ஊரில் வசித்து வந்தனா். ஐஸ்வா்யா வீட்டில் பள்ளி மாணவா்களுக்கு டியூசன் எடுத்து வந்தாா்.

ஐஸ்வா்யாவுக்கு வள்ளியூரைச் சோ்ந்தவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை தாயும், மகளும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா். தகவலறிந்து வந்த ராதாபுரம் காவல் நிலைய போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரின் கைப்பேசிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், நிச்சயம் செய்யப்பட்ட நபா், அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].