/

வையம்பட்டி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

News image
அமிா்தம்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி அருகே சாலையின் குறுக்கே நாய் திடீரென குறுக்கிட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த அங்கன்வாடி சமையலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மனைவி அமிா்தம் (44). இவா், அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சமையலராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சோ்வைக்காரன்பட்டியிலிருந்து வையம்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கருங்குளம் பகுதியில் சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது.

இதில், நிலைதவறி கீழே விழுந்து படுகாயமடைந்த அமிா்தம் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் அமிா்தம் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்குப் பின் மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.