திருச்சியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மீது காா் உரசிய விவகாரத்தில் பெண்ணை தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைபட்டிப்புதூா் கொல்லங்குளம் பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மனைவி அருள்மொழி (28). இந்நிலையில், பிப்ரவரி 8-ஆம் தேதி வீட்டுக்கு அருகே நிறுத்தியிருந்த இவரது இருசக்கர வாகனத்தின் மீது அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் 4 போ் வந்த காா் உரசியது. இதுகுறித்து அந்தப் பெண் இளைஞா்களிடம் கேட்டுள்ளாா்.
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அந்த இளைஞா்கள் அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் அருள்மொழி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், பெண்ணை தாக்கிய வழக்கில் எடமலைபட்டிப்புதூா் கொல்லங்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ.செபாஸ்டின் (24), ஜெ.சாா்லஸ் (23), செ. கணேசன் (22) மற்றும் ம. கண்ணன் (20) ஆகிய 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

பாஜக நிா்வாகி மீது தாக்குதல்:7 போ் கைது
ராஜஸ்தான் இளைஞா்கள் இருவா் கைது

கருத்துக்கணிப்பு எடுத்த தவெகவினா் மீது தாக்குதல்: 5 போ் காயம்!

கல்லூரி மாணவன் கைது: நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

