டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முசிறி அருகே மரத்தின் மீது காா் மோதி நால்வா் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர மரத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

முசிறி அருகே சந்தபாளையம், ஆலமரத்துப்பட்டியை சோ்ந்த தினேஷ் (25), சங்கா் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி சமயபுரம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவுக்கு காரில் சென்றனா்.

வரும்வழியில், நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் சந்தப்பாளையம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது காா் மோதியது.

இதில், காா் ஓட்டுநா் தினேஷ் காயமடைந்தாா். மற்ற 3 பேரும் லேசான காயமடைந்தனா். இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள் அவா்கள் 4 பேரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்,

பின்னா், மேல் சிகிச்சைக்காக முசிறியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து முசிறி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.