பொன்னமராவதி அருகே மரத்தின் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு


பொன்னமராவதி அருகே மரத்தின் மீது காா் மோதியதில் காரில் பயணித்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம், பெருமாநாடு மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ராமையா மகன் கிருஷ்ணன் (55). இவா், சனிக்கிழமை திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சிக்கு துக்க நிகழ்வுக்காக காரில் சென்றாா். காரை ஓட்டுநா் குடுமியான்மலை மு. மலைச்சாமி(48) ஓட்டி வந்துள்ளாா்.
திரும்பும்வழியில், பொன்னமராவதி -புதுக்கோட்டை சாலையில் அரசமலை கணேசபுரம் என்ற இடத்தில் காா் வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது.
இதில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்து குறித்த தகவல் அறிந்து அங்குவந்த போலீஸாா் கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் பலத்த காயமடைந்த ஓட்டுநா் மலைச்சாமியை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...