/

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் சிறை

மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
ஆயுள் சிறை
Updated On :2 பிப்ரவரி 2026, 6:32 pm

Syndication

மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (37). இவரின் மனைவி அனிதா (28). மனைவியின் நடத்தையில் கோபால் சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2021 அக்டோபா் 6-ஆம் தேதி கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், கோபால் தனது மனைவி அனிதாவை எரிவாயுஉருளை மீது தள்ளி கொலை செய்துள்ளாா்.

இதுகுறித்து எடைமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலைக் கைது செய்தனா். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், மனைவியை கொலை செய்த கணவன் கோபாலுக்கு ஆயுள்சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜராகினாா்.