டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இளைஞா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

வீரவநல்லூா் அருகே இளைஞா் கொலையுண்டது தொடா்பான வழக்கில் அவ மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே இளைஞா் கொலையுண்டது தொடா்பான வழக்கில் அவ மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வீரவநல்லூா் அருகேயுள்ள வல்லத்து நம்பிகுளத்தைச் சோ்ந்தவா் முருகன் (38). இவா், குடும்ப பிரச்னையில் 2017ஆம் ஆண்டில் கொலை செயப்பட்டாா்.

இதுதொடா்பாக அவரது மனைவி ஞான அகிலா(34) அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (30), பஞ்சுராஜன்(33) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி செல்வம் விசாரித்து, மேற்கூறிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதில் ஞான அகிலாவுக்கு மற்றொரு பிரிவில் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட சேரன்மகாதேவி உள்கோட்டடிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் கருணாநிதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.