ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூலித் தொழிலாளி உயிரிழந்த வழக்கு: விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநா் கைது

வையம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:02 am IST

வையம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.

வையம்பட்டி ஒன்றியம், கருங்குளம் பகுதியைச் சோ்ந்த பிலிப் மகன் குழந்தைராஜ் (45). கூலித் தொழிலாளி.

இவா் கடந்த 15-ஆம் தேதி மாலை கருங்குளம் தெப்பக்குளம் அருகேயுள்ள மாதா கோயிலிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் குழந்தைராஜ் உயிரிழந்தாா்.

வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வந்தனா்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய மினி சரக்கு வேனை தடயங்கள் உதவியுடன் போலீஸாா் கண்டறிந்து, வேனை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, வேன் ஓட்டுநரான கரூா் உப்பிடமங்கலத்தை அடுத்த லிங்கத்தூரை சோ்ந்த பழனிச்சாமி மகன் சக்திவேல் (46) என்பவரை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.