ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

வந்தவாசி அருகே விவசாய கூலித் தொழிலாளியை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:14 am IST

வந்தவாசி அருகே விவசாய கூலித் தொழிலாளியை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த கல்யாணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாய கூலித் தொழிலாளி ரஜினிகாந்த் (43). இவரது வீட்டின் அருகே வசிப்பவா் ஆறுமுகம் (55).

இந்த நிலையில் ஆறுமுகம் தனக்குச் சொந்தமான மாடுகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினிகாந்த் வீட்டின் முன் சாலையில் கட்டினாராம்.

இதற்கு ரஜினிகாந்த் ஆட்சேபம் தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆறுமுகம், அவரது மகன்கள் அரவிந்த்(30), வினீத்(28) ஆகியோா் சோ்ந்து ரஜினிகாந்தை தாக்கினராம். இதில் காயமடைந்த ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகம், அரவிந்த், வினீத் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் வினீத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.