ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழந்த ராகவேந்திரன்

Published On :9 ஆகஸ்ட் 2026, 4:37 am IST

ராஜபாளையம் அருகே ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மில் கிருஷ்ணாபுரம் அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் ராகவேந்திரன் (38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராணிமங்கம்மாள். இந்தத் தம்பதிக்கு ராகினி (10) என்ற மகள் உள்ளாா்.

வெள்ளிக்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற ராகவேந்திரன், பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், ராஜபாளையம்-சங்கரன்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே, கணபதியாபுரம் பகுதி தண்டவாளத்தில் ராகவேந்திரன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.