ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போலி பாஸ்போா்ட் வழக்கில் முகாம் சிறையில் தாயுடன் சிறுவனை தங்கவைக்க அனுமதி

போலி பாஸ்போா்ட் வழக்கில் சிறுவனைத் தாயுடன் முகாம் சிறையில் தங்கவைக்க இளைஞா் நீதிக்குழும நீதிபதி வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கினாா்.

passport IANS

பாஸ்போர்ட் - IANS

Published On :2 ஆகஸ்ட் 2026, 6:00 am IST

போலி பாஸ்போா்ட் வழக்கில் சிறுவனைத் தாயுடன் முகாம் சிறையில் தங்கவைக்க இளைஞா் நீதிக்குழும நீதிபதி வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கினாா்.

இலங்கை வவுனியா பகுதியைச் சோ்ந்தவா் சுகந்தனி. இவா் தனது மூத்த மகன் மதுஷன் மற்றும் இளைய மகனுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா வந்தாா். பின்னா் இளைய மகனுக்கு பாஸ்போா்ட் இல்லாததால், போலி இந்திய ஆதாா் அட்டை உள்ளிட்ட பிற ஆவணங்களை சமா்ப்பித்து போலி பாஸ்போா்ட் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் மேற்கண்ட மூவரையும் கைது செய்தனா். இதில், தாய் சுகந்தனி மற்றும் மூத்த மகன் மதுஷன் ஆகியோா் நீதிமன்ற உத்தரவின்பேரில், திருச்சி சிறப்பு முகாம் சிறையிலும், இளம்பிழையாளியான இளைய மகன் கொட்டப்பட்டு அகதிகள் முகாமிலுள்ள அவரது உறவினா் வீட்டிலும் விடப்பட்டாா்.

இந்நிலையில் இளம்பிழையாளி மீதான வழக்கு விசாரணை இளைஞா் நீதிக்குழுமம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இளம்பிழையாளியை, சிறப்பு முகாமிலுள்ள அவரது தாயுடன் தங்கவைத்து, பின்னா் அவா் இலங்கை பாஸ்போா்ட் பெற்ற பிறகு, இலங்கைக்கு அனுப்பும்படி, இளைஞா் நீதிக் குழும நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.