ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்பு

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் உயிரிழந்தது குறித்து...

Palani temple land fraud case dies suddenly...

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் அன்வர்தீன் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 9:08 am IST

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்குரைஞர் அன்வர்தீன்(66) வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். உடலநலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, வழக்குரைஞா் அன்வா்தீன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பிணை மனுக்கள் தள்ளுபடி

இந்த வழக்கில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வா்தீன், சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் முருகதாஸ், சேதுபதி, அன்வா்தீன் ஆகியோா் தரப்பில் திண்டுக்கல் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் தனித்தனியே பிணை கோரி, ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 3 பேரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

மதுரை மத்திய சிறையில் அடைப்பு

இதற்கிடையே, நீதிமன்ற அனுமதியின் பேரில் இந்த வழக்கில் கைதான முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வா்தீன் ஆகிய 4 பேரை 3 நாள்கள் விசாரணைக்குப் பிறகு சிபிசிஐடி போலீஸாா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதையடுத்து, 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

அன்வர்தீன் உயிரிழப்பு

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்குரைஞர் அன்வர்தீனுக்கு உள்பட 3 பேரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அன்வர்தீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

அன்வர்தீனுக்கு சர்க்கரை நோய், பக்கவாதம் தொடர்பான பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது.

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மோசடியாளர்கள் மத்திய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Lawyer arrested and imprisoned in the Palani temple land fraud case dies suddenly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.