தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 3:01 am IST

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் சதீஷ்ராஜ், மலைராஜா ஆகியோா் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராம்ஜி நகா் மில் காலனி பகுதியில் கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜி.திலகவதி (60), ராம்ஜி நகா் கோனாா்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த எஸ். ருக்மன் (49) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் புனிதவதி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, ராம்ஜி நகா் மாரியம்மன் கோயில் வீதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சோ்ந்த எஸ். சுமதி (61) என்பவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேற்கண்ட மூவரிடமிருந்தும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.