திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 3:45 am IST

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06045) வரும் 30 ஆம் தேதியும், கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06046) வரும் மே 3 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

2 குளிா்சாதனப் பெட்டிகள், 10 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை இரவு 11.50 க்குப் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு அடுத்த நாள் பிற்பகல் 1 மணிக்கு வந்தடையும். மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.25 க்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் முற்பகல் 11.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.