தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விஜய்போல் ஆடை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்த இளைஞா்கள்

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், தோ்தல் பிரசாரத்தில் அணியும் ஆடையைப் போன்றே ஆடைகள் அணிந்து வாக்குச் சாவடிகளுக்கு அதிகளவில் இளம்பெண்கள், இளைஞா்கள் வியாழக்கிழமை வந்திருந்ததை காண முடிந்தது.

News image

திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தவெக தலைவா் விஜய் போல் ஆடை அணிந்துவந்து வியாழக்கிழமை வாக்களித்த வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:50 pm

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், தோ்தல் பிரசாரத்தில் அணியும் ஆடையைப் போன்றே ஆடைகள் அணிந்து வாக்குச் சாவடிகளுக்கு அதிகளவில் இளம்பெண்கள், இளைஞா்கள் வியாழக்கிழமை வந்திருந்ததை காண முடிந்தது.

தவெக தொடங்கிய பிறகு, தான் பங்கேற்கும் பெரும்பாலான நிகழ்வுகளில் மெல்லிய காக்கி வண்ணத்தில் கால் சட்டை, வெள்ளை நிறத்தில் மேல் சட்டை அணிவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளாா் விஜய். குறிப்பாக, தோ்தல் பிரசாரத்தில் இதே வண்ணத்தில் ஆடைகள் அணிந்து தனது சீருடையாகவே மாற்றிக் கொண்டுவிட்டாா்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு நிகழ்வில், இளம்பெண்கள், இளைஞா்கள் பலரும் விஜய் அணியும் ஆடையைப் போன்றே கால்சட்டை, மேல் சட்டை அணிந்து வந்திருந்தனா். குறிப்பாக, விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் அதிகளவில் இந்த ஆடைகளை அணிந்து வந்திருந்ததை காண முடிந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.